Monday, August 01, 2005

அந்தாதி வேளையில் ஒரு கொலை

“தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற
…………………………………………………………………………………………..”


கோயிலில் அந்தாதி பாடத் தொடங்கிவிட்டார்கள். மணி ஏழாகிவிட்டது. ஓடாத கைகடிகாரம் எழுத்தாளரைக் குழப்பி இருந்தது. ஆனால் ஏனோ இன்று வழக்கத்தைவிட அதிகமாக இருட்டிவிட்டது. வீட்டுக்கு வேகமாக விரைந்து நடந்துக்கொண்டிருந்தார் எழுத்தாளர். கோயிலை ஒட்டிய குறுக்குப் பாதையில் என்றைக்குமே போனதில்லை. ஆனால் இன்று அந்த பாதையை தேர்ந்தெடுத்தார். கோயிலின் பெருமதிலின் பின் இருந்த புதர் நிறைந்த காட்டுப்பகுதியில் நடக்கத் தொடங்கினார். திடீரென மேலே மின்னல் வெட்டியது. அப்போது தான் அந்த கொலையை நிகழ்த்துவதைப் பார்த்தார்.

“அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், ……….. அறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.

என்று அபிராமப்பட்டரின் அந்தாதி வரிகள் பின்னணியில் சற்று தொலைவில் ஒலிக்க யாரும் அறிய முடியாத, அறியக் கூடாதபடி திட்டமிடப்பட்டிருந்த அந்த நரகச் செயலை அறிய நேரிட்டது. அந்த கொலையின் திட்டம் அவரை அங்கேயே உறையச் செய்தது. மெல்ல புதரிடையே தவழ்ந்து மறுபடியும் கோயிலை நோக்கி நகரத் தொடங்கினார். புதர் வழியின் முட்கள் அவரை கிழித்துக் கொண்டிருந்தது. கோயிலின் பின்புறம் ஒரு வழியாக வந்து சேர்ந்தார்.

“ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை,..…. தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே”

அந்தாதியின் இறுதிப் பாடலை பாடி முடித்துவிட்டனர். கிட்டதட்ட நாற்பந்தைந்து நிமிடம் எடுத்திருந்தது.

வழக்கமான பாதையில் விரைந்து வீடு வந்து சேர்ந்தார். சாவி பூட்டுக்குள் நுழையவில்லை. அவ்வளவு நடுக்கம். கோவில், அபிராமப்பட்டர், அந்தாதி வேளை. இந்த கொலை திட்டத்தை எப்படியாவது உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும். தடயம் எதுவுமின்றி நிகழ்த்தப்பட இருந்த கொலை. எழுத்தாளர் பார்க்க நேரிட்டதன் காரணம் கொலைகாரர்களின் கட்டுப்பாட்டில் இல்லாத எதிர்பாராத சம்பவங்கள். இந்த நிகழ்வை வெளிப்படையாக சொல்ல இயலாது. ஆனால் உலகுக்கு இதைப் பற்றி ஒர் குறிப்பாவது தர வேண்டும்.

வீட்டினுள் நுழைந்தார். அவசர அவசரமாக நடந்த சம்பவங்களை கதையாக எழுதத் தொடங்கினார். இந்த கதையினால் கொலைகாரர்கள் மீது சற்று சந்தேகம் ஏற்படும். கொலை திட்டம் அம்பலம் ஆகும். ஆனால் இவரிடம் எந்த விசாரணையும் நடைபெறாது. எல்லாவற்றிற்கும் மேலாக யாரும் இந்த திட்டத்தை மறுபடியும் பயன்படுத்த முடியாது. யாராவது கேட்டால் இது வெறும் கற்பனையே, எந்த உண்மை நிகழ்வுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம்.

அவசர அவசரமாக கதையை எழுதி முடித்தார். நேரத்தைப் பார்த்தார். ஓடாத கைகடிகாரம், ஆனால் கையில் காணவில்லை. உறைந்தார். கொலைக்காரர்கள் இந்நேரம் வீட்டு வாசலில் இருக்க வேண்டும். எழுத்தாளர் முன் அவர்கள் தோன்றினர்……..

எழுத்தாளரின் கொலையை விசாரிக்க காவல்துறை வந்தது. எழுத்தாளர் மேசை மீது வைக்கப்பட்டிருந்த கடைசி கதை காவலரின் கண்ணில் பட்டது. அதை எடுத்து காவல் துறை அதிகாரி படிக்கத் தொடங்கினார்.
"
அந்தாதி வேளையில் ஒரு கொலை

“தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற
…………………………………………………………………………………………..”


கோயிலில் அந்தாதி பாடத் தொடங்கிவிட்டார்கள். மணி ஏழாகிவிட்டது. ஓடாத கைகடிகாரம் எழுத்தாளரைக் குழப்பி இருந்தது. ஆனால் ஏனோ இன்று வழக்கத்தைவிட அதிகமாக இருட்டிவிட்டது. வீட்டுக்கு வேகமாக விரைந்து நடந்துக்கொண்டிருந்தார் எழுத்தாளர். கோயிலை ஒட்டிய குறுக்குப் பாதையில் என்றைக்குமே போனதில்லை. ஆனால்...............
.....”

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. Your votes and comments are precious.

18 Comments:

Blogger Santhosh Guru said...

நன்று, ரிகர்ஸிவ் (Recursive) சிந்தனையாளரே :) .

வினோத், ரிகர்ஸிவுக்கு தமிழ்ல என்ன ??

10:42 PM  
Blogger vin said...

நன்றி.

We could perhaps call recursive stories as அந்தாதிக் கதைகள் :-)
அந்தாதி நம் மரபிலக்கணத்தில் ஏற்கனவே பழக்கத்தில் உள்ள சொல்.
தவிர இந்த வகை கதை அந்தமும் ஆதியாகி முடியாமல் தொடர்வதால் இது பொருந்தும் என்று நினைக்கிறேன்.

-Vinodh
http://visai.blogspot.com

11:40 PM  
Blogger NS said...

Wow!!!
Your thinking never ceases to amaze! Ovvoru kadhaiyum ivvalo radically different from one another... supeb writing!:-)

5:58 AM  
Blogger vin said...

Thanks a lot. I only hope I do meet the lofty expectations in my future stories also :-)

Thanks and regards
Vinodh
http://visai.blogspot.com

7:16 AM  
Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

Good one :-)

12:43 PM  
Blogger vin said...

நன்றி கங்கா.

-Vinodh
http://visai.blogspot.com

12:33 AM  
Blogger Boston Bala said...

பரவாயில்லை :-) இன்னும் கொஞ்சம் மினுக்கிடலாம்....

6:21 AM  
Blogger Suresh said...

ரொம்ப நல்லா இருக்கு வினோத்... வாழ்த்துக்கள்.

1:33 PM  
Blogger kvman said...

அந்தாதியும் recursion-ம் வெவ்வேறு வார்த்தைகள் என்பது என் கருத்து. recursion-க்கு தமிழில் ஒரு வார்த்தை இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. பல தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் ஒரு வார்த்தையின் மூலம் விவரித்து விட முடியாது. அது போல recursion-ம் special case ஆக இருக்கலாம்.

7:13 AM  
Blogger vin said...

நன்றி பாலா, சுரேஷ். முயற்சிகள் தொடரும்.

மஞ்சுநாத்:
நன்றி. Recursion என்பதை அந்தாதி என்று குறிப்பிடுவதில் உங்களைப் போல் எனக்கும் உடன்பாடு கிடையாது. இவ்வகை recursive storyயினை குறிப்பிடவே அந்தாதி என்ற சொல்லைப் பயன்படுத்தினேன். ஏனெனில் ஒரு வாசகராக படிக்கும்போது கதையின் முடிவு முதலுக்கு அழைத்துச் செல்கிறது. மேலும் நம் மரபு இலக்கணத்தில் இச்சொல் புழக்கத்தில் உள்ளது. ஆனால் recursion என்பது அந்தாதியை விட ஆழமான சொல். முடிவும் முதலும் ஒன்றாக இருப்பதோடன்றி, ஒரு தொடர்ச்சியாக நீளுகிறது. இணையத் தேடலில் recursion என்பதற்கு கிட்டிய வேறொரு சொல் மறுசுழற்சி.

இங்கே இதைப் பற்றிய கேள்வியை திரு. இராம.கி அவர்களிடம் எழுப்பியுள்ளேன்.
பார்க்கலாம்.
-Vinodh
http://visai.blogspot.com

12:42 AM  
Blogger Sundar said...

Infinite recursion error
Segmentation fault:Cranium dumped ;)

நல்ல மொழிவு. மறுசுழற்சி ஓரளவு நல்ல மொழிபெயர்ப்பாகத் தோன்றுகிறது.

11:09 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

Vinodh,

Really excellent !!!

In fact, all your stories are interesting to read !!!!

12:26 AM  
Blogger vin said...

சுந்தர், பாலா:
நன்றி.

-Vinodh
http://visai.blogspot.com

4:51 AM  
Blogger Ramya Nageswaran said...

வினோந், புதுமையான கற்பனை (எனக்கு recursive writing பற்றி தெரியாது). முகமூடியின் சிறுகதைப் போட்டியில் கலந்து கொள்ளலாமே. உங்களைப் போன்ற பல திறமைசாலிகளுக்கு வலைப்பதிவில் ஒரு நல்ல வாய்ப்பு.

6:08 AM  
Blogger Ramya Nageswaran said...

Vinodh, sorry for typing your name wrongly in my comment. :-)

6:09 AM  
Blogger vin said...

நன்றி ரம்யா அவர்களே.
இங்கே இந்த போட்டியை பற்றிய ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளேன்.

-Vinodh
http://visai.blogspot.com

6:23 AM  
Blogger லதா said...

மன்னிக்கவும் இது கதையின் ஆரம்பம் அல்ல என்று சிறு குறிப்புடன்

"டிட்டோ" என்றான் அவன்.

என்று தொடங்கும் சுஜாதா அவர்களின் சிறுகதையைப் படித்திருக்கிறீர்களா? :-)

3:33 AM  
Blogger vin said...

லதா:
கதை படித்ததற்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

நான் அவ்வளவாக சுஜாதாவின் கதைகளைப் படித்ததில்லை. Would be informative to know what the themeline of his story was.

As for this story, being a computer science engineer, I just thought of applying the concept of recursion to a storyline and built the theme around it.

-Vinodh

4:28 AM  

Post a Comment

<< Home