Monday, August 08, 2005

இணையப் புலவனின் காதல் திணை

பாலை
(மணலும் மணல் சார்ந்த தளமும்)
பாலை கவிஞன் காதல் கொண்டான்….சப்பாத்திக் கள்ளி நெஞ்சினில் ஈரம் காதல்.

நெய்தல்
(கடலும் கடல் சார்ந்த தளமும்)
நெய்தல் கவிஞன் காதல் கொண்டான்... சிப்பி நெஞ்சினில் முத்து காதல்.

முல்லை
(காடும் காடு சார்ந்த தளமும்)
முல்லை கவிஞன் காதல் கொண்டான்… மூங்கில் நெஞ்சினில் மெல்லிசை காதல்.

மருதம்
(வயலும் வயல் சார்ந்த தளமும்)
மருதக் கவிஞன் காதல் கொண்டான்… கடுந்தோல் நெஞ்சினில் கடலை காதல்.

குறிஞ்சி
(மலையும் மலை சார்ந்த தளமும்)
குறிஞ்சி கவிஞன் காதல் கொண்டான்… பாறை நெஞ்சினில் பூ காதல்.

இணையம்
(கணினியும் கணினி சார்ந்த தளமும்)
இணையத் தளத்தின் ஆங்கோர் மூலையில் கணினிக் கவிஞன் காதல் கொண்டான்…
வன்பொருள் நெஞ்சினில் மென்பொருள் காதல்.

-வினோத்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. Your votes and comments are precious.

5 Comments:

Blogger குழலி / Kuzhali said...

கலக்கல்ங்க...

என்ன திடீரென தமிழ்மணத்தில் காதல் மணம் வீசோ வீசென்று வீசுகின்றது

10:38 PM  
Anonymous Anonymous said...

Vinod,

UnakkuL ippadi oru puli thoongittirundhudha :))

Nalla thamizh muyarchi eduththu padichu romba naaL aachu. SiRidhu vayitRukkum eeidhai nanba (kaalai breakfast saapida vendaam pola!!).

Un varigaLukku pinnal uLLa aazhndha sindhanai viLangudhu. Un blog-idai vazhi pokka ninaithavarai, muzhudhum padiththu comment-um ezhudha vaikkum thiRan un varigaLukku undu (naan yen comment ezhudharennu ninaicha??).

Pachchai - manam ulukkiyadhu.

Ulagaththai un paarvaiyil paarkka padikka virumbum thozhi...
Malar.

2:27 AM  
Blogger vin said...

குழலி:
நன்றி.

மலர்:
உங்கள் கனிவான சொற்களுக்கு நன்றி.

-Vinodh
http://visai.blogspot.com

4:49 AM  
Blogger vin said...

கவிதா, வினு: நன்றி.

இன்றைய டிவி நிகழ்ச்சிகள் style-ல் ஒரு dedication.

இந்த வசனக்கவிதை வன்பொருள் நெஞ்சங்களில் மென்பொருள் install செய்தவர்களுக்கும், install செய்ய வைத்தவர்களுக்கும் ;-)

10:50 PM  
Anonymous Anonymous said...

Nalla Kavidhai!!!! yarukkaga ezhuthappa kavidhai!!!!

3:47 AM  

Post a Comment

<< Home